Categories
பல்சுவை

என்ன ஒரு புத்திசாலித்தனம்….!! சீன அதிபரையும் மக்களையும் ஆச்சரியப்பட வைத்த நபர்…. அப்படி என்ன செய்தார் பாருங்களே….!!

நம் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு செயலை செய்தோமானால் அது அதிக நாட்களுக்கு நிலைத்திருக்காது. அதேபோல் சீனாவில் இருக்கக்கூடிய நபர் ஒருவர் ஒரு கட்டிடத்தை அரசின் இடத்தில் கட்டுயிருக்கிறார். அதனால் அரசாங்கமும் அந்த கட்டிடத்தை இடிக்கும்படி ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சிறிது நாட்கள் கழித்து ஆணையின் நிறைவேற்றுவதற்கு அந்நாட்டின் அரசு ஊழியர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி மிகப் பெரிய ஆச்சரியம் கொடுத்தது.

அது என்னவென்றால், அந்தக் கட்டிடம் முழுவதும் சீன நாட்டினுடைய அதிபர் ஜீ ஜின்பிங் அவர்களுடைய புகைப்படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். இதனைக் கண்ட அரசு ஊழியர்கள் அந்த கட்டிடத்தை இடிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனைதொடர்ந்து சிறிது நாட்கள் கழித்து மீண்டும் அரசு ஊழியர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்டிடம் முழுவதும் ஒட்டப்படிருந்த அந்நாட்டு அதிபருடைய புகைப்படங்களை எடுத்துவிட்டு அதனை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

அந்த நபர் இப்படி செய்வதற்கு காரணம் அந்நாட்டின் அதிபரான ஜீ ஜின்பிங் அவர்கள் மேல் வைத்திருக்கும் பயம்தான். அவருடைய புகைப்படத்தை ஒட்டி வைத்தால் கட்டிடத்தை இடிக்க மாட்டார்கள் என அவர் புத்திசாலித்தனமாக நினைத்தது நெடு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இந்த சம்பவம் சீனாவில் இருக்கக்கூடிய மக்களையும் அந்நாட்டின் அதிபரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Categories

Tech |