இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் தற்போது சீனா இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்ப்புக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஆண்டு சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் உள்ள உண்மைகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீனா மீது இந்த பிரச்சனையில் குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அதேசமயம் இந்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் மாஸ்கோவில் சந்தித்ததையடுத்து இருநாட்டு முன்கள படைகளும் பங்கோங் சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்களல்ல பங்காளிகளாக இருக்கின்றனர். இந்தியாவும், சீனாவும் தற்போதைய நிலையில் சர்வதேச மற்றும் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் பொறுப்புகளை ஏற்கின்றன என்று வாங் யி தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது.