Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க மறுத்துவிட்ட சீனா …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். ஜோ பைடன் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் நரேந்திர மோடி, பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனியின் ஏஞ்சலா மேர்க்கெல், இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டனின் போரிசன் மற்றும் தைவானின் சாய் இங்-வென் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.

அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படும் என்பது எங்கள் புரிதல் என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பந்தப்பட்ட விஷயங்களில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானம் அசைக்க முடியாதது என்றார்.

சீனா தவிர ரஷ்யா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பைடனுக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.

பார்கின்சன் நோய் காரணமாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகுவார் என்று கூறப்படும் இந்த சூழலில் புதினிடமிருந்து எந்த வாழ்த்தும் வரவில்லை.
மேலும் டிரம்புக்கு நெருக்கமாக அறியப்படுபவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. பைடன் தனது பிரச்சாரத்தின் போது போல்சனாரோ நிர்வாகம் மற்றும் அமேசான் தொடர்பாக கூறிய கருத்துகளால் போல்சனாரோ எரிச்சல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்படும் வரை பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்க  மாட்டேன் என்று மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கூறியுள்ளார்.

உலக தலைவர்களில், டிரம்புடன் வலுவான உறவுகளை கொண்டிருந்த தலைவர்களான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பைடன் வெற்றிக்கு விரைவாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

அமெரிக்கத் தேர்தலில் பைடன் வெற்றி பெறுவார் என்ற நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பின்னர் சவுதி அரேபியாவின் ஆளும் குடும்பமும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்துடன் சீனாவின் இணக்கமான உறவை கொண்டிருக்கவில்லை. சீனாவிற்கு நெருக்கமானவர் என்று டிரம்ப் பைடன் மீது குற்றசாட்டு வைத்தார்.  ஆனால் பைடன் டிரம்பை விட இன்னும் அதிகமாக சீனாவிற்கு நெருக்கடி கொடுப்பர் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக, பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஒரு “குண்டர்” (Thug ) என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் “சீனாவை அழுத்தம் கொடுப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும், தண்டிப்பதற்கும்” சர்வதேச அளவில் பெரும் முயற்சி எடுப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். 

அதோடு, அவரது பிரச்சாரத்தின் பொது சின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான “இனப்படுகொலை” நடவடிக்கையை கண்டித்தார். சீனா குறித்த தற்போதைய அமெரிக்க கொள்கையை விட ஒரு படி மேலே,  செல்வார் பைடன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories

Tech |