நிலவை கைப்பற்றுவார்கள் என்று தங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த நாசாவின் கருத்தை சீனா மறுத்திருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதில் சீன அரசு அதிகமாக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்களை சீனா ஏவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னிலையில், இது பற்றி நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்ததாவது, சீனா, சந்திரனில் இறங்குவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும்.
இது தற்போது எங்களுக்கானது. நீங்கள் வெளியே இருக்க வேண்டும். சீனா, விண்வெளி திட்டத்தை ராணுவ திட்டமாக வைத்துள்ளது. பிறரின் சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பத்தை திருடிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜாவோ லிஜியன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகத்தினுடைய தலைவர் உண்மைக்கு மாறாக சீனா குறித்து பொறுப்பில்லாமல் கருத்து தெரிவிப்பது இது முதல் தடவை கிடையாது. தங்களின் நியாயமான விண்வெளி ஆய்வுகளை எதிர்த்து அமெரிக்க தொடர்ச்சியாக அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான பொறுப்பில்லாத கருத்துக்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்.