Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. நடுநிலைத்தன்மையில் உள்ளோம்…. சீன வெளியுறவு மந்திரி கருத்து…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி விடாமல், நடுநிலை கொள்கையை தொடர்ந்து நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ரஷ்ய நாட்டுடன் நாங்கள் பரஸ்பர நம்பிக்கையும், நன்மை பயக்கும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |