சீனா இந்திய மாலுமிகளுக்கு சீன துறைமுகங்களில் தடை விதித்துள்ளதா என்பது குறித்த பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் சீன அரசு இந்திய மாலுமிகள் சீனாவுக்கு வரும் வர்த்தகக் கப்பல்களில் இருக்கக்கூடாது என அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதாக தகவல் வெளியிட்டது. மேலும் சீனா தங்கள் துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களை நிறுத்துவதற்கு தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனா இந்திய மாலுமிகளுக்கு சீன துறைமுகங்களில் தடை விதித்ததாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் “அத்தகைய கட்டுப்பாடுகளை சீனா ஒருபோதும் விதிக்கவில்லை எனவும், அந்த தகவல்கள் பொய்யானவை” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.