உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.
கொரோனோ வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9,000த்தை நெருங்க உள்ளது. இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் FAVIPIRAVIR என்ற மருந்து கொரோனோ வைரசை சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதாகவும், இதனை மற்ற நாடுகளும் பயன்படுத்துமாறு சீன அரசு பரிந்துரை செய்துள்ளது.