சீனாவின் கொரோனா மரபணு ஆய்வாளர் நாட்டைவிட்டு தப்பியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்
சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் கொரோனா குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த வவ்வால் பெண்மணி எனும் ஆய்வாளர் தன் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்பட்ட தககவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களில் ஒருவரான வூஹான் நகரை சேர்ந்த Shi Zhengli கொரோனா மரபணு தொடர்பை முதன் முறையாக கண்டுபிடித்தவர்.
அரசின் கட்டாயத்தால் தற்போது அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரும் அவரது குடும்பத்தாரும் நாட்டை விட்டு தப்பி சென்றதாகவும் கொரோனா தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் பாரிஸ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் கொடுத்து விட்டதாகவும் கூறி சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றது.
ஆனால் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்றும் தான் எந்த தவறும் செய்யவில்லை என நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் Shi Zhengli உறுதிபடக் கூறியுள்ளார். வெளிவந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து சனிக்கிழமை பதிலளித்த இவர் “நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அறிவியலை மட்டுமே நம்பும் நமக்கு மிக விரைவில் இந்த மேகமூட்டம் விலகும் எனவும் சூரியன் மீண்டும் பளிச்சிடும் எனவும் தெரியும்” எனக் கூறியுள்ளார்