Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. சேதத்தை ஏற்படுத்துமா..? சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!!

சீன வெளியுறவுத்துறை, கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், தானாகவே எரிந்துவிட வாய்ப்பு உள்ளதால், பூமியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில் சீனா இடம்பெறாததால், தங்களுக்கென்று தனி விமான நிலையத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த நிலையம் பூமிக்கு மேல் சுமார் 370 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, சீனா கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி அன்று லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த தொகுதி சுமார் 21 டன் எடை உடையது. இந்நிலையில் இந்த ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால்  கட்டுப்பாடின்றி பூமியை சுற்றிக்கொண்டிருப்பதாகவும், எந்த சமயத்திலும், எந்த பகுதியிலும் விழலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் கணிப்பு படி, இன்று அதிகாலை 4:30 மணியளவில் அந்த ராக்கெட் பூமியில் விழ போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் பூமியினுடைய புதிய பாதையினுள் புகும் போது அதன் பகுதி பெரும்பாலானவை எரிந்துவிடும்.

எனவே பூமியில் ராக்கெட் விழுந்தாலும் அதனால் அதிகமான விளைவுகள் ஏற்படாது. மேலும் அந்த ராக்கெட் பூமியில் எங்கு விழும் என்று குறிப்பிட்ட நேரத்தில் தெரிவிக்கப்படும். மேலும் இந்த ராக்கெட், சர்வதேச கடல் பகுதியில் விழ அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |