Categories
உலக செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுவாங்க..! சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வீரர்கள்… பிரபல நாட்டில் வெளியான தகவல்..!!

இந்தியாவுக்கு எதிராக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீரர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர்களில் 90% பேர் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி சீன மற்றும் இந்திய ராணுவத்தினருக்கிடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீன தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகமான டாஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த தகவலை ஏற்க சீனா மறுத்து விட்டது. இதையடுத்து சீனா முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதத்தில் சீன வீரர்கள் 5 பேர் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டதோடு அதனை ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு சான்றாக முதல் தர தகுதி பாராட்டுகளும், கௌரவப் பட்டங்களும் அந்த தாக்குதலில் உயிரிழந்த 4 சீன இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது என இருதரப்பு படைகளின் தளபதிகள் நடத்திய பல சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு பின் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்த எல்லை விவகாரத்தில் சுமூக தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்தியாவுக்கு எதிராக 50,000 படைவீரர்களை சீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக எல்லையில் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் சீன வீரர்களின் உடல்நிலை தீவிர வானிலை மற்றும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன ராணுவம் சுழற்சி முறையில் வீரர்கள் அனைவரையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு வட்டாரம், தங்களுக்கு எதிராக குவிக்கப்பட்டுள்ள சீன வீரர்களில் 90 சதவீதம் பேர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சீன படைகள் கடந்த வருடம் ஏற்பட்ட கடும் குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, அவர்களில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் புதிய படையினர் பிற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவும் படைவீரர்களை ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாற்றி வருகிறது. ஆனால் இந்த சுழற்சி முறையானது 40 முதல் 50 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் சீனாவுக்கு எதிராக கிழக்கு லடாக் பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுபவம் பெற்ற இந்திய ராணுவம் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |