சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பதாக சீனா கூறிய நிலையில் இதில் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பிற்காக, கடற்கரை கப்பல்களை அத்தீவில் நிலைநிறுத்துவதற்காக வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனா, அந்த தீவில் ராணுவ தளத்தை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சாலமன் தீவுகளின் பிரதமர் கூறியிருக்கிறார்.
இந்த ஒப்பந்தத்தினால் சாலமன் தீவில், சீனா தங்களது படைகளை நிறுத்துவதற்கு வழி கிடைத்திருக்கிறது. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், சாலமன் தீவிலிருந்து சுமார் 9,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்தியாவிற்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இதனால் பாதிப்புகள் கிடையாது என்று கூறப்பட்டிருக்கிறது.