Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துக்களை அனுப்பியுள்ள சீனா ….!!

பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்‍கிளி தாக்‍குதலை சமாளிக்‍க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்‍கள் அனுப்பப்படுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து  வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்‍கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் பாதிப்பில் சிக்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை  பாதிக்கவைத்துள்ள இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.வெட்டுக்கிளி தாக்குதலையும் , படையெடுப்பையும் தடுப்பாதற்காக சீனாவில் விசேஷமாக வளர்க்கப்படும் 1 லட்சம் வாத்துகள் பாகிஸ்தானுக்கு வர இருப்பதாக  பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு இந்த வெட்டுக்கிளிகள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |