சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்து செய்து அனுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்பட இருக்கின்றார். டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு என்று அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனால் அதிபர் தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல நாட்டு தலைவர்கள் வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்தியாவும் அந்த வரிசையில் வாழ்த்து தெரிவித்தது. ஆனால் சீனா வாழ்த்து தெரிவிக்காமல் இருந்து வந்தது.
குறிப்பாக கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகளை திருப்பி விட்ட அமெரிக்கா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். சீனா – அமெரிக்கா மோதல் போக்கே இருந்து நிலையில் சீனா வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு சீனா அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இது உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்தியாவிடம் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவுக்கு மிகுந்த நட்பு நாடாக இருந்தது. அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை நண்பன் என்றே அழைத்து வந்தார். இப்படியான சூழலில் தற்போது டிரம்ப் தோல்வியை கொண்டாடும் வகையில் ஜோ – பைடனுக்கு சீனா வாழ்த்து அனுப்பியுள்ளதோ என உலக நடுகள் கணிக்கின்றனர். அமெரிக்காவிடம் சீனா சமரசம் செய்துகொள்வது இந்தியாவிற்கு ஏதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா ? என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.