சீனாவின் இரண்டு முக்கிய நகரங்களில் வீசிய புயல் காற்றினால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுகான் நகரை கடந்த சனிக்கிழமை இரவு பெரிய புயல் ஒன்று தாக்கியது. இந்தப் புயல் காற்று மணிக்கு 23.9 கிலோமீட்டர் வேகத்தில் அடித்ததால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இதனிடையே காற்றின் வேகத்தோடு கன மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள சூஸோ நகரிலும் இந்த புயல் தாக்கியதால் அங்கும் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த இரண்டு நகரங்களிலும் 12 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.