சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறது.
சீனா தங்களுக்கு என்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் பொருட்களை முன்பே அனுப்பிவிட்டனர். நேற்று, மேலும் தேவையான பொருட்களை சரக்கு விண்கலத்தில் அனுப்பியுள்ளனர்.
அந்த சரக்கு விண்கலமானது லாங் மார்ச்-7 என்ற ராக்கெட் மூலமாக வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் பத்து நிமிடங்களில் அந்த ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சுற்று பாதையை அடைந்து விட்டது என்று சீனா தெரிவித்திருக்கிறது. இந்த வருட கடைசிக்குள் சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்கிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.