Categories
உலக செய்திகள்

தலீபான்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க தயார்.. 2 நாடுகளின் அதிரடி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார்கள்.

நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியுடன், நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு, பாகிஸ்தான் அரசு தலிபான்களின் தலைமையிலான ஆட்சியை ஆதரித்திருந்தது. தற்போது, சீனாவும் தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கிறது. எனினும் ரஷ்யா, தலிபான்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வைத்து தான் ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |