Categories
உலக செய்திகள்

‘சிறப்பாக செயல்படுகிறது’…. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தடுப்பூசிகள்…. உறுதிப்படுத்திய சீன அமைச்சர்….!!

சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் பயன்பாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது.

சீனாவும் பிறநாடுகளும் சீன தடுப்பூசிகளை ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் சீன தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் சரி பயன்பாட்டிலும் சரி சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இதனை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேலும் சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான ஜெய் ஜோங்வெய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதிலும் சீனாவில் சினோபாம், சினோவேக் என்ற இருவகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை இரண்டையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளது. குறிப்பாக உலக முழுவதும் உள்ள 110 நாடுகளுக்கு சுமார் 170,00,00,000 தடுப்பூசிகளை சீனா அளித்துள்ளது.

Categories

Tech |