சீனாவில் நேற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி அந்நாட்டின் தலைநகரில் தொடங்கியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. தற்போது, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று 3-11 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. மேலும் இதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், 6 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது ஆகும்.