கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட சீன அரசாங்கம் வனவிலங்குள் விற்பனையை முழுமையாக தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதுவரை வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் வேகமாகப் பரவிவரும் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசாங்கம் முழு மூச்சுடன் முயற்சி செய்து வந்தாலும் அதில் வெற்றி கொள்ள முடியாமல் திணறுகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றானது வன விலங்குகளிலிருந்து பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீன மக்களிளின் உணவு பட்டியலில் வன விலங்குள் அதிகளவில் உணவாக உட்கொள்ளும் பழக்கம் காணப்படுகின்றன. இதனையடுத்து, சீனாவில் வனவிலங்குகளை விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் கொரானாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் நாடாளுமன்றத்தின் உயர்மட்ட குழுவில் இதற்கான ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீன அரசாங்கம் உலக நாடுகளுக்கு ; சீன நாட்டின் உணவுப் பழக்கவழக்கங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.