சீனா வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்த வாய்ப்புள்ளது என்று தைவான் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சீனா, தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சுமார் 150-ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை கடந்த 1-ஆம் தேதி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தைவான், சீனா தங்கள் மீது 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்தும் என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் “கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு சீனாவுடனான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தைவானை சீனா ஆக்கிரமிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தைவான் மீது முழு அளவிலான படையெடுப்பை 2025-ஆம் ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளது. எனவே தைவான் ராணுவ அமைச்சகம் இதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது” என்று தைவான் ராணுவ மந்திரி சியு குவோ-செங் கூறியுள்ளார்.