சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் இந்தியாவை கண்டு எங்களுக்கு பயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து குளோபல் டைம்ஸ் நாளேட்டின் தலைமை செய்தி ஆசிரியர் ஹூ சிஜின் கூறியிருப்பதாவது, “எனக்குத் தெரிந்த வரை கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் சீனாவை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
நான் இந்தியா தரப்பினரிடம் சொல்ல விரும்புவது, திமிர் பிடித்து நடந்துகொள்ள வேண்டாம், சீனாவின் பொறுமையை கண்டு பலவீனமானவர்கள் என்ன தவறாக நினைக்காதீர்கள். சீனா, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால் எதற்கும் நாங்கள் பயம் கொள்ளவில்லை” என கூறியுள்ளார்.