போர்களை வெல்லும் வகையில் எலைட் படைகளை உருவாக்குவதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்திய எல்லையில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் சீனா தற்போது புது படையை அமைக்க திட்டமிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 லட்சம் ராணுவ வீரர்களை உள்ளடக்கியிருக்கும் சீனாவின் படைத்தளபதியாக ஜி ஜின்பிங் உள்ளார். இந்நிலையில், அவர் ராணுவத்திற்கு இவ்வாறு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது, இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.
அதாவது அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன முறையில் போர் பயிற்சி, தொழில்நுட்பங்களுக்கு உதவி போன்ற அனைத்து பயிற்சிகளையும் உள்ளடக்கிய எலைட் படைகளை உருவாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் அவரின் உத்தரவில், “அதிகாரிகள், போர்வீரர்கள் அச்சமின்றி தைரியத்துடன் செயல்பட தயாராக இருக்க வேண்டும்.
போர் சமயத்தில் உயிர் தியாகம் செய்ய நேர்ந்தாலும், அதற்காக பயப்படாமல் தைரியத்துடன் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிரிகளை போராடி வெல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பு சீன நாட்டை விட இந்தியா படை பலத்தில் பலவீனமாக தான் இருந்தது.
ஆனால் தற்போது சீன நாட்டிற்கு கடும் சவால் கொடுக்கும் விதத்தில் இந்தியாவின் பலம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. லடாக் மற்றும அருணாச்சல பிரதேசத்தில், சில மாதங்களுக்கு முன்பாக மோதல் நடந்தது. இதில் இந்தியா தான் சீனாவிட அதிக பலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனாவின் இந்த புதிய ஏற்பாடு இந்தியாவை உஷாராக உதவியாக அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.