சீன அரசு இலங்கைக்கும் தங்களுக்குமான உறவில் மூன்றாம் நாடு தலையிடக் கூடாது என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறது.
சீன நாட்டின் வெளியுறவு அமைச்சரான வாங்-யீ, இலங்கையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை மற்றும் சீன நாடுகளின் நட்பு, இருநாட்டு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
இந்த இரு நாடுகளின் உறவு, பிற நாடுகளை குறிப்பிடவில்லை என்றும், இரண்டு நாட்டு உறவிற்கு இடையில் மூன்றாம் நாடு தலையிடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இதற்கு முன், இந்திய எல்லைப்பகுதியில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களை சீனா கைப்பற்றி, ஊர் பெயரை மாற்றி வைத்தது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.
மேலும், மகிந்த ராஜபக்சே சீனா எங்களின் நீண்ட கால நட்பு நாடு. எங்களது நீளமான வரலாற்றில் சீனா, எங்களின் உண்மையான தோழர் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது, குறிப்பிடத்தக்கது.