Categories
உலக செய்திகள்

இலங்கை பிரச்சனையில் இந்தியா தேவையின்றி தலையிடக்கூடாது… எச்சரிக்கும் சீனா…!!!

தங்கள் நாட்டின் உளவு கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதுதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சீன அரசு தங்கள் நாட்டின் யுவான் வாங் 5 என்னும் போர்க்கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் ஆறு நாடுகளுக்கு நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இலங்கை அரசு, அதற்கு அனுமதி வழங்கியது.

ஆனால், இந்தியா, சீனாவின் உளவு கப்பலால் எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்தது. அதன் பிறகு, இலங்கை அந்த கப்பலின் வருகையை ரத்து செய்துவிடுமாறு சீனாவிற்கு கடிதம் அனுப்பியது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீனா வலியுறுத்தியதை இலங்கை ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில், எதிர்ப்பை மீறி சீனா தங்களின் கப்பலை இலங்கை துறைமுகத்திற்கு அனுப்பி விட்டது. மேலும் இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இறையாண்மை கொண்ட இலங்கை நாட்டின் வெளியுறவு கொள்கைகளில் இந்தியா மூக்கை நுழைப்பது முறை கிடையாது.

எங்களுக்கும், இலங்கைக்குமான உறவில் இந்தியா தலையிடுவது தேவையில்லாதது. அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கை அதன் விருப்பப்படி எந்த நாட்டுடன் வேண்டுமானாலும்  உறவை மேம்படுத்திக் கொள்ளலாம். உளவு கப்பல் பிரச்சனையில் இந்தியா தேவையின்றி  தலையிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Categories

Tech |