சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1949-ஆம் வருடத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், சீனா மற்றும் தைவான் நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறது.
மேலும், சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறி புகுந்து வருகிறது. இந்நிலையில், சீன நாட்டின் 12 ஹெச்-6 குண்டுகளை வீசக்கூடிய விமானங்கள், ஜே-16 போர் விமானங்கள் 38, உட்பட மொத்தம் 56 விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் புகுந்துள்ளது.
எனவே, தைவான் போர் விமானங்கள் அவற்றை தடுத்ததோடு, வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்கியதாக தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து கடந்த 1ம் தேதியில் இருந்து தற்போது வரை 148 போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்துள்ளது.