சீனாவில் வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அந்நாட்டு அதிபர் ஜின்பிங் என்பவர் சீனாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வறுமையை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கடந்த 40 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது சுமார் 770 மில்லியன் மக்கள் அரசின் முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 98.99 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை வறுமையை ஒழிக்க 2030 வரை காலக்கெடு அளித்த நிலையில் அதற்கு முன்னதாகவே சீனா வெற்றியை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் சீனா மற்ற நாடுகள் மத்தியில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளதாகாவும், இதனால் இது வரலாற்றில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.