போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
சீனாவைச் சேர்ந்த கலிஸூ என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் காரணமாக சீன இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.