Categories
உலக செய்திகள்

அறையில் கிடந்த இளைஞர்…. மரணத்தில் மர்மம்…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்….!!

சீனாவில் படித்து வந்த  இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார். 

இந்தியாவில் பீகார் மாநிலத்தில்உள்ள  கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான அமன் நாகேசன். இவர் சீனாவில் டியான்ஜின் பகுதியில் உள்ள  பல்கலைக்கழகம் ஒன்றில் வணிக நிர்வாகம் பற்றிய படிப்பை பயின்று வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக 23,000 மாணவர்கள் இந்தியா திரும்பிய போது சிலர் மட்டும் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதில் அமனும் ஒருவர். இந்த நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அமன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அறிந்த சீன அதிகாரிகள் அவரின் உடலை மீட்டுள்ளனர். இதற்கிடையில்  சீனாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமனின் உடலை இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமனின் மர்ம மரணம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

Categories

Tech |