Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த தொழிலதிபர்…. தண்டனை அளித்த சீனா நீதிமன்றம்…. மேல்முறையீடு செய்யும் கனடா தூதரகம்….!!

சீனாவில் உளவு பார்த்த குற்றத்திற்காக தொழிலதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் Michael Spavor ஆவார். இவர் சீனாவில் உளவு வேலை செய்ததாகவும் மாநில ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதாகவும் Michael க்கு அந்நாட்டு  நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் 11 ஆண்டுகள் கழித்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே கனடா நாட்டைச் சேர்ந்த Lloyd Schellenberg- என்பவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் Michael  மற்றும் கனடாவின் முன்னாள் மந்திரி Michael Kovrig  கைது செய்யப்பட்டனர். இதனால் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவானது பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடாவில் இருக்கும் ஹுவாய் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான Meng Wanzhouவை நாடு திரும்ப வைக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சீனா Michael மற்றும் Lloyd இருவரையும் பேரம் பேசும் முயற்சியானது நடப்பதாக புகார் எழும்பியுள்ளது. இதற்கிடையில் Michael நாடு  கடத்தப்படுவாரா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.  இருப்பினும் சீனாவில் அளிக்கப்பட்ட தண்டனை காலம் முடிந்த பின்னரே அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சீனாவிற்கான கனடா தூதரகம் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |