சீனாவில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பாதிப்பினால் 75000 கோடி ரூபாய் பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுதை அடுத்து அதில் 12 பேர் சுரங்கரயில் பயணிகள் ஆவர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழையினால் 12.4 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை அடுத்து சுரங்கப்பாதைகள், தெருக்கள் உணவகங்கள் போன்ற கட்டிடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்த சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோயிலும் வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வரை 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்னும் ஐந்து பேரை காணவில்லையனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 8.52 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த கனமழைக்கு 24,474 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் 876.6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஹெனான் மாகாண நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதில் “5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் மழை அளவானது சீனாவின் சில பகுதிகளில் பெய்துள்ளது” என கூறியுள்ளனர்.