சீனாவில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க தம்பதிகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துச் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4.15 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக விவாகரத்து சட்டங்களில் கடுமையான மாற்றங்களை சீன அரசு கொண்டு வந்தது.
அதில், விவாகரத்துக் கோரும் தம்பதியினர் 30 நாட்கள் கட்டாயம் சேர்ந்து வாழ வேண்டும். அதன்பின் 30 நாட்களுக்கு பிறகு விவாகரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 30 நாட்களுக்கு தன் துணையுடன் விருப்பமில்லாமல் வாழவேண்டும் என்று மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட தம்பதிகள் தற்போது விவாகரத்திற்கு விண்ணப்பிக்க வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர்.