Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை என தகவல்!!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், யாருடைய எல்லை எதுவரை என்பதில் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த பகுதியில்தான் தற்போது இரு தரப்பும் படைகளை குவித்து வருகின்றன.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவிவிட்டதாகக் கூறப்பட்டாலும், அதை மறுத்துள்ள சீனா, 3 கிலோ மீட்டர் தூரம் வரை இருப்பது தனது எல்லைதான் என்றும், எனவே சீன ராணுவம் எல்லை தாண்டிவிட்டதாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அதோடு, எல்லை தாண்டிச் செல்லக்கூடாது என்பதில் சீன ராணுவம் கட்டுப்பாட்டோடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் காரணமாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |