Categories
உலக செய்திகள்

வெளியேறும் அமெரிக்கா படைகள்…. சீனத் தூதரிடம் பேச்சுவார்த்தை…. காபூலில் சந்திப்பு….!!

சீனத் தூதரிடம் தலீபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் சலாம் ஹனாபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும். இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ஆப்கானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை வெளியேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கத்தாரில் உள்ள தலீபான்களின் அரசியல் அலுவலகத்தின் துணை தலைவரான அப்துல் சலாம் ஹனாபி ஆப்கானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்துள்ளார். இதனை தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் சீன தூதரகம் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு, ஆப்கானின் தற்போதைய சூழல், இருதரப்பு நாடுகளின் உறவுகள், சீனாவின் கருணை அடிப்படையிலான உதவிகள் போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |