எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயர் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என முன்னாள் நிதியமைச்சர் திரு பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு பேசினார்.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனர்களா அல்லது சந்திர மண்டலத்தில் இருந்து வந்த அந்நியர்களா என்று வினவியுள்ளார். பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்ல மாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.