கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக சீனா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகில் முதன் முதலாக கொரோனா தொற்றானது சீனாவில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றானது அமெரிக்கா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு பரவியது. ஆனால் இந்த கொரோனா தொற்று பரவலை சீனா வெகுவாக கட்டுப்படுத்தியது. இருப்பினும் சமீப காலமாக அங்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் சீனாவில் உள்ள நகரங்களிலும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பயணிகள் மூலமாக தான் கொரோனா தொற்றானது அதிகமாக பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” புதிதாக கொரோனா தொற்று பாதிப்பானது பதிவாகவில்லை. மேலும் நேற்று முன்தினம் 26 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் அனைவரும் அயல்நாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை சீனா அரசு பதிவு செய்வதில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 15 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீனாவில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4,636 ஆகும். இதனை தொடர்ந்து இதுவரை 96,284 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.