அந்நிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும் படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சீனப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும்படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, மும்பை, டெல்லி கொல்கத்தா போன்ற நாட்டின் முக்கிய 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் சீன வெடி உற்பத்தியாளர்களுக்கும் வணிகர்களுக்கும் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.