கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் தான் முதல் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் இது பல்வேறு நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனால் சீனா மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் சீனாவில் தற்போது வடக்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே ஒன்பது மாகாணங்களில் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது மேலும் சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் மங்கோலியா, கன்சூ, பெய்ஜிங் போன்ற பகுதிகளில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கு இரட்டை இலக்கங்களில் தான் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை இருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.