Categories
உலக செய்திகள்

3000 ஆண்டுகள் பழமை…. கண்டுபிடிக்கப்பட்ட முகமூடி…. கலாச்சார பாரம்பரிய நிர்வாகத்தினர் அறிவிப்பு….!!

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க முகமூடி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள குவாங்கன் பகுதியில் இருக்கும் சான்சிங்டி இடிபாடுகளிலிருந்து தங்க முகமூடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முகமூடியானது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும் இது 37.2 சென்டி மீட்டர் அகலமும் 16.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதனை தென்மேற்கு பகுதியில் கண்டுபிடித்ததாக சீனாவின் கலாச்சார பாரம்பரிய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இதன் எடையானது 100 கிராம் ஆகும். குறிப்பாக இந்த முகமூடி கி.மு 1046 ஆம் ஆண்டு ஷாங் வம்சத்தின் பிற்பகுதியில் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் சமீப காலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட 500 கலைபொருட்களில் இதுவும் ஒன்று என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |