அதிகாலையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் லுக்சியான் கவுன்டி பகுதியில் உள்ள புஜி டவுன்சிப்பில் என்னும் கிராமத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 60 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 35 வீடுகள் நிலநடுக்கத்தினால் சேதமடைந்துள்ளன. மேலும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.