Categories
உலக செய்திகள்

அப்படி என்ன நடந்தது..? ஜி-7 தலைவர்களை சரமாரியாக திட்டிய சீனா… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் ஜி-7 நாடுகளை கடுமையாக திட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள கார்ன்வால் கவுண்டியில் ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சர்வதேச பிரச்சினைகள், ரஷ்யா மற்றும் சீனா போன்ற பகிரப்பட்ட வெளியுறவு கொள்கை முன்னுரிமைகள், உலகளாவிய சவால்கள் ஆகிவற்றை தீர்ப்பதற்கான மூன்று நாள் மாநாட்டிற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 நாடுகளின் மற்ற தலைவர்களை, சீனாவில் நடைபெற்று வரும் கட்டாய வேலை வாங்கும் அராஜகத்தினை ஒழிக்க அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு தெரிவித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய லண்டனில் உள்ள சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஜி-7 நாடுகளை சரமாரியாக திட்டியுள்ளார். அதாவது அந்த சீன தூதரக செய்தித்தொடர்பாளர், ஒரு சிறிய குழு நாடுகளால் உலகளாவிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட நாட்கள் பல வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய அல்லது பெரிய, பணக்கார அல்லது ஏழை, பலவீனமான அல்லது வலுவான நாடுகள் என அனைத்து உலக நாடுகளையும் நாங்கள் சமமாகவே கருதுகிறோம் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர் அனைத்து நாடுகளின் ஆலோசனையையும் கேட்ட பிறகே உலக விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |