Categories
உலக செய்திகள்

“இந்தியா இங்கிருந்து எவ்ளோ தூரத்துல இருக்கு?”…. இலங்கை ராணுவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய சீன தூதர்….!!!!!

கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். அதாவது வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங்-இன் தலைமையிலான குழு வருகை தந்துள்ளது. அவர்கள் ஆசியாவிலேயே மிக பழமை வாய்ந்த நூலகமான யாழ்ப்பாண நூலகத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால் யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “சீன தூதுவர் தன்னிடம் எந்த ஒரு விஷயமும் கலந்துரையாடவில்லை” என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சீன தூதுவர் பருத்தித்துறை கடற்கரை பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ராணுவ அதிகாரிகளிடம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இந்தியா உள்ளது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒரு ராணுவ அதிகாரி இங்கிருந்து இந்தியா 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து அந்தச் சீன தூதுவர் டிரோன் கேமரா மூலம் பருத்தித்துறை பகுதியிலிருந்து ஆராய்ந்து பார்த்துள்ளார்.

Categories

Tech |