Categories
தேசிய செய்திகள்

ஆமாம்..! ”சீன வீரர்கள் அத்துமீறல் உண்மை”… ஒத்துக்கொண்ட இந்தியா …!!

கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளதாக இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது. ஆனால், சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய அரசு மறுத்தது. இந்த நிலையில், முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சீனாவின் ஊடுருவல் ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆவணத்தில், ”எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவத்தின் ஊடுருவல் மே மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு அதிகரித்தது. பாங்சாங் சோ, கோக்ரா, குக்ராங் நாலா ஆகிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் மே 17, 18 ஆகிய தேதிகளில் எல்லை மீறி நுழைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அத்துமீறலைக் குறைப்பதற்காக கள அளவில் பேச்சுச்வார்த்தை நடத்தப்பட்டதாகவும், பின்னர் கமாண்டர்கள் மூலமான  பேச்சுவார்த்தை ஜூன் 6ம் தேதி நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன் பின் ஜூன் 15ம் தேதி இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்துள்ளாதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே எல்லை விவகாரத்தில் இப்போது உள்ள நிலைப்பாடே தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் கிழக்கு லடாக்கில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |