சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 கப்
நீளவாக்கில் நறுக்கிய கோஸ் – 1 கப்
குடமிளகாய் – 1
வெங்காயம் – 1
பூண்டு – 3 பற்கள்
வெங்காயத்தாள் – 1 கட்டு
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், கோஸ், பூண்டு , குடமிளகாய் சேர்த்து வதக்கி பின் சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின் இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறி வெங்காயத்தாளைத் தூவி பரிமாறினால் சுவையான சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் தயார் !!!