Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து 1300 சிம் கார்டுகளை கடத்த முயன்ற நபர்.. காவல்துறையினர் சோதனையில் வெளிவந்த தகவல்கள்..!!

சீனாவை சேர்ந்த நபர், இந்தியாவிலிருந்து, சுமார் 1300 சிம் கார்டுகளை பதுக்கி தன் நாட்டிற்கு கொண்டு சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

சீனாவை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றி திரிந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தன் உள்ளாடையில் இந்திய சிம்கார்டுகள் சுமார் 1300 வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுபற்றி உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஜுன்வே ஹன் என்ற அந்த நபரை காவல்நிலையத்தில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் சீனாவின் பாஸ்போர்ட், இந்திய பணம், ஏடிஎம் கார்டுகள் 2, வங்கதேசத்தின் விசா, மடிக்கணினி 2, மொபைல்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ், பணபரிவர்த்தனை எந்திரங்கள் 5, அமெரிக்க டாலர், வங்கதேச டாக்கா மற்றும் போன்றவை இருந்துள்ளது. அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இவரின் மீதும், இவரது மனைவி மீது அதிகமான வழக்குகள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், தற்போதுவரை இந்தியாவிற்கு அவர் நான்கு தடவை வந்திருக்கிறார். இங்கிருந்து சிம் கார்டுகளை உள்ளாடைகளில் மறைத்து சீன நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் சிம் கார்டுகளை கொண்டு, இந்தியாவில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளை ஹேக் செய்து வங்கியில் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

Categories

Tech |