சீனாவில் பாம்பு ஒன்றை இணையத்தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு, விஷம் நீக்கப்படாத பாம்பு அனுப்பபட்டதால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டில் பாம்பு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்துள்ளார். எனவே ஒரு பாம்பை இணையதளத்தில் ஆர்டர் செய்திருக்கிறார். சீன நாட்டில் வீட்டில் பாம்புகளை வளர்ப்பதற்கு அனுமதியுண்டு. எனவே அவரது வீட்டிற்கு பாம்பு வந்து சேர்ந்தது.
வழக்கமாக வீட்டில் பாம்பு வளர்க்க நினைப்பவர்கள், அதன் விஷத்தன்மையை நீக்கிய பின்பு தான் வாங்குவார்கள். எனவே அந்த நிறுவனமும் விஷத்தன்மை நீக்கப்பட்டுவிட்டதாக அவரிடம் கூறியுள்ளது. எனவே அவர் தன்னருகில் பாம்பை படுக்க வைத்துள்ளார். அப்போது திடீரென்று அவரின் தொடையில் பாம்பு கடித்து விட்டது.
அப்போது அவருக்கு பாம்பிடம் விஷம் இருந்தது தெரிந்துவிட்டது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்ல வேளையாக உயிர் பிழைத்து விட்டார். அதன் பின்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பாம்பை விற்ற நிறுவனம் கவனக்குறைவாக, விஷத்தன்மை எடுக்கப்படாத பாம்பை அனுப்பியது தெரியவந்துள்ளது.