Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த பிரச்சனை… ஹூபே மாகாணத்தில் இருந்து கூட்டாக வெளியேற முயற்சி… வெடிக்கும் கலவரம்!

ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின்  வூஹான் நகரில் தொடங்கியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸை அந்நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகளை கொரோனா தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன நாளுக்குநாள் இந்த நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற முயற்சி செய்வதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத்தொடங்கிய  கொரோனா வைரஸ் ஒருகட்டத்தில் தீவிரமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதனால் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். அதைத்  தொடர்ந்து சீன அரசு, ஊரடங்கு உத்தரவு மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனவைக் கட்டுப்படுத்தியது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாக திகழ்ந்த ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்பு நிலை  திரும்பி வருவதால் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர்.

 

Shocking videos show violence erupting on bridge linking Hubei ...

இந்தநிலையில், ஹூபே மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முயற்சி செய்வதால் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. இதனால் பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இவர்களை போலீசார் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. . எல்லையில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாலைகளை திறந்து வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, ஹுபே மற்றும் அண்டை மாகாணமான ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மோதல் தொடங்கியது என சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

மோதலின் இருபுறமும் இரண்டு மாகாணங்களும் சனிக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன, அதில், அவற்றிற்க்கிடையே சோதனைச் சாவடிகள் அகற்றப்படும் என்றும் கடக்க சிறப்பு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்றும் கூறியுள்ளன.

 

சனிக்கிழமையன்று, அரசின்  பீப்பிள்ஸ் டெய்லி (People’s Daily) என்ற ஊடகம் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறும் ஒரு செய்தியை வெளியிட்டது, ஹூபே பூர்வீகவாசிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தல் அல்லது தனிமைப்படுத்துதல் “அவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது” என்று கூறியுள்ளது. “ஹூபே மக்கள் அனைவரும் வேலைக்குத் திரும்பும்போது நாம் அவர்களுடன் நல்லுறவைக் காட்ட வேண்டும்” என்று கட்டுரை கூறியது. “காரணம் எளிது – அவர்கள் நமது தோழர்கள்.” என  கூறியுள்ளது.

Categories

Tech |