Categories
உலக செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் மந்திரி…. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம்…!!!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நேற்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் தன் தண்டனையை குறைக்குமாறு கோரியதை தொடர்ந்து மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |