Categories
உலக செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய சீன மக்கள்… 2 வருடங்களுக்கு பின்… களைகட்டிய சைவத்திருவிழா…!!!

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள்.

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை  நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில் நேற்று நடந்த அந்த விழாவில் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் உற்சாகமாக கலந்து கொண்டனர். சீன மக்கள், தாங்கள் வழிபடும் கடவுள்களின் உருவங்களை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். அப்போது தங்கள் தாடை பகுதியில் கத்தி, மிகப்பெரிய வாள்  போன்றவற்றை அலகுகளாக குத்திக் கொண்டு தெருக்களில் சென்றிருக்கிறார்கள்.

மிகக் கூர்மையான ஆயுதங்களால் அலகு குத்தி செல்வது சைவ திருவிழா நடைபெறாத காலங்களில் செய்த பாவங்களின் அடையாளம் என்று கூறுகிறார்கள். பார்ப்பவர்களை பதறச் செய்யும் விதத்தில் மிகவும் பெரிதான வாள்களையும், கத்திகளையும் குத்திக் கொண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை கடவுளுக்கு செலுத்தி இருக்கிறார்கள்.

Categories

Tech |