Categories
இராணுவம் உலக செய்திகள்

“உண்மை தெரியக்கூடாது” உங்க முறைப்படி பண்ண வேண்டாம்…. ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேட்டுக்கொண்ட சீன அரசு..!!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியில் செல்லக்கூடாது என்று அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாமென வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில்இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனாஅரசு அனுமதிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை நேற்று முன்தினம் அறிவித்தது. தாக்குதலின் போது உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை அவர்களின் முறையில் அடக்கம் செய்ய வேண்டாம் என ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்துக்கு தெரிவிக்க கூடாது என்ற சிந்தனையில் சீனா இவ்வாறு முடிவு செய்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் தான் செய்த தவறை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் நோக்கில் சீனா இவ்வாறு செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. இது ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பெரிய  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக அங்குள்ள ப்ரீட்பார்ட் நியூஸ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |