சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். சரியாக 1.30 மணிக்கு சீன அதிபர் வர இருக்கும் நிலையில் இவர் இங்கு இருந்து பயணம் மேற்கொள்ளும் பிரத்யேக 4 கார்கள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் சீன அதிபர் வருகையையடுத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள 100 சீன அதிகாரிகளும் வந்துள்ளனர்.அவர் சென்னை வந்த பிறகு அந்த காரில் ஏறிய நேரடியாக நட்சத்திர ஹோட்டல் செல்கிறார். இதற்காக சாலை நெடுகிலும் கலை பண்பாட்டு துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விமான நிலைய விமான பகுதி முழுவதுமாக வரவேற்க நிற்கிறார்கள்.
செண்டை மேளங்கள் முழங்க அவரை வரவேற்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்படும் , அதற்க்கு பதிலாக அனைத்து வாகனகளும் பெருங்குளத்தூர் வழியாக மதுரவாயில் சாலையில் செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர் . சீன அதிபர் சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அந்த நேரங்களில் விமான நிலையம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்க கலைநிகழ்ச்சிகள் செய்யப்பட்டு, தேசியக் கொடியை ஏந்தி மாணவர்கள் சாலை நெடுகிலும் வரவேற்பு அளிக்க தயாராக இருக்கின்றன.